Paristamil Navigation Paristamil advert login

கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் நீங்க!

 கண்களுக்கு கீழ்  ஏற்படும் கருவளையம் நீங்க!

25 வைகாசி 2025 ஞாயிறு 16:43 | பார்வைகள் : 255


இன்றைய காலக்கட்டத்தில், வயதெல்லாம் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. இது களைப்பு, தூக்கமின்மை, நீரிழப்பு, தோல் அழற்சி, அல்லது மெலனின் அதிக உற்பத்தி காரணமாக வரக்கூடும்.

இது ஓர் அழகு குறையாகவே காணப்படும். ஆனால் கவலைப்பட வேண்டாம்! உங்கள் வீட்டிலேயே உள்ள சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை குறைக்கலாம்.

கற்றாழையின் ஜெல்லை சுத்தம் செய்து, கருவளையத்தில் மென்மையாக தடவவும். 5–10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் வைத்திருக்கலாம். இது சருமத்தை ஈரமாகவும், குளிர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.


இரண்டும் சிறிதளவு துருவி சாறு எடுத்து, ஒன்றாக கலந்து கருவளையத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது தொற்றுகளை குறைத்து, தோலை பராமரிக்க உதவும்.

ஒரு சின்ன துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து, கண்களுக்கு கீழ் வைக்கவும். 15–20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இது கண்களுக்கு சோர்விழக்க உதவுகிறது.

பாலில் ஒரு பஞ்சு நனைத்து, கண்ணைச் சுற்றி தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை குறைக்கும்.

இந்த இயற்கை வழிகளை தொடர்ந்து பயன்படுத்தினால், கருவளையம்  குறைய தொடங்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்