ஊடகங்களை அவமதிக்கும் மெலோன்சோன்!!

25 வைகாசி 2025 ஞாயிறு 16:42 | பார்வைகள் : 305
LFI (La France Insoumise) கட்சியின் தலைவர் ஜோன்-லூக் மெலன்சோன், பிரெஞ்சு வானொலி நிலையமான RTL, தமது உரைகளை பழிசுமத்தும் வகையில் மாற்றிப் பயன்படுத்தியது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் 2025 மே 25-ம் தேதி, ஞாயிறு அன்று நிகழ்ந்தது. RTL தேசிய ஒருங்கிணைப்பாளர் மனுவல் பொம்பார் (Manuel Bompard),RTL செய்தி நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது பாலஸ்தீனிய-இஸ்ரேலிய மோதல் குறித்த கேள்விகளின் போது, மெலன்சோனின் பழைய கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக குற்றம் சுமத்திய லொன்சோன் ஊடகங்களைப் பொய்யர்கள் என இழிவுபடுத்தி உள்ளார்.
அழுக்கு பொய்யர்கள். எனது சொற்களை அவர்கள் உருவாக்கி சொன்னார்கள். அந்த 'குற்றவாளிப் பத்திரிகையாளர்' பண்புக்கு வெட்கமில்லை! என தனது X தளத்தில் மிகக் கேவலமாகத் திட்டி உள்ளார்.
மேலும், மெலன்சான் தனது கட்சியினரிடையே ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அவர் பத்திரிகைகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்துள்ளார்.
கடந்த காலத்திலும், முக்கிய ஊடகங்கள், குறிப்பாக BFMTV, CNEWS, Le Figaro போன்றவற்றை, நுட்பமாகத் தலைப்புகளில் தவறான பிரசாரம் செய்வதாகவும், சமூகவிரோத பிரிவினைகளை தூண்டுவதாகவும் அவர் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்.
RTL தரப்பில் இதற்கு உரிய பதிலாக இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எனினும், இந்தக் கருத்துகள் ஊடக சுதந்திரம், மாநில விமர்சன உரிமை ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அவர் கூறிய கருத்துக்கள் தான் மேற்கோள் காட்டப்பட்டன. அவரின் வாயால் சொல்லாதது எதுவும் மேற்கோள் காட்டப்படவில்லை. தனது கருத்துக்களை மக்களிற்கு ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய வெறுப்பில் ஊடகங்கள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.