அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ்
22 ஆனி 2025 ஞாயிறு 10:10 | பார்வைகள் : 1363
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடும் தொண்டை வலியை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது.
அதன்பின் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ’நிம்பஸ்’ (Nimbus) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
அந்த மாகாணத்தில் தொற்று பாதிக்கப்படுவோரில் 37 விழுக்காடு பேருக்கு நிம்பஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வகை வைரஸின் அறிகுறி தொண்டையை அறுப்பது போன்றும், தொண்டையில் பிளேடு சிக்கியது போன்றும் வலியை ஏற்படுத்துவதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மட்டுமின்றி சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan