விஜய்சேதுபதி - பூரி ஜெகந்நாத் படத்தில் இணையும் நாயகி யார் தெரியுமா?

21 ஆனி 2025 சனி 15:29 | பார்வைகள் : 1721
விஜய் மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கவுரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளதாகவும், அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பூரி ஜெகநாத் இயக்கிய முந்தைய படங்களின் தோல்வி குறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, "நான் இயக்குனர்களின் முந்தைய படங்களை வைத்து அவர்களை மதிப்பிட மாட்டேன். அவர்கள் சொல்லும் கதை எனக்கு பிடித்திருந்தால் நடித்து விடுவேன்," என்று விஜய் சேதுபதி கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025