இங்கிலாந்தில் இருந்தும் டெஸ்ட் போட்டியை காண வராத கோலி
21 ஆனி 2025 சனி 12:57 | பார்வைகள் : 4208
இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை காண விராட் கோலி வரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, முதல் இன்னிங்ஸில், 3 விக்கெட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்த விராட் கோலி, கடந்த ஒரு வருடமாகவே குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளுக்காக, சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண மைதானத்திற்கு விராட் கோலி வருவார் என ஊகங்கள் எழுந்தது.
இதில் 2 போட்டிகள், விராட் கோலி வசித்து வரும் லண்டன் நகரிலே நடைபெற்ற உள்ளது. இருந்தும் போட்டியை காண விராட் கோலி நேரில் வரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோலி எங்கு விளையாடினாலும், அவரை காண ரசிகர்கள் பெருமளவில் மைதானத்திற்கு வருவார்கள். புகழ் வெளிச்சம் காரணமாக பொது இடங்களுக்கு கூட எங்கும் சுதந்திரமாக செல்ல முடியாத நிலை இருந்தது.
இதன் காரணமாகவே, தனிப்பட்ட வாழ்க்கையை சுதந்திரமாக வாழவே அவர் குடும்பத்துடன் சென்று இங்கிலாந்தில் குடியேறினார்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு அதன் மூலம் இங்கிலாந்திலும் விராட் கோலி பிரபலமடைந்தால், அங்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும்.
இதனால் அவர் போட்டிகளை காண வரமாட்டார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan