Paristamil Navigation Paristamil advert login

நெதர்லாந்தை பழிதீர்த்து வெளியேற்றிய நேபாள அணி

நெதர்லாந்தை பழிதீர்த்து வெளியேற்றிய நேபாள அணி

20 ஆனி 2025 வெள்ளி 10:18 | பார்வைகள் : 4318


ஸ்கொட்லாந்து முத்தரப்பு டி20 போட்டியில் நேபாள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

டிட்வுட் மைதானத்தில் நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய நெதர்லாந்து 174 ஓட்டங்கள் குவித்தது. மைக்கேல் லெவிட் 86 (53) ஓட்டங்களும், வான் டெர் மெர்வ் 36 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நேபாள அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குஷால் பர்டெல் 65 (51) ஓட்டங்களும், ஆரிப் ஷேய்க் 39 (23) ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம், மூன்று முறை சூப்பர் ஓவர் ஆடி தோல்வியுற்றதற்கு நெதர்லாந்தை பழிதீர்த்துக் கொண்டது நேபாள அணி.

மேலும், நேபாளம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்கிறது.    

 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்