ஈரானை தாக்குவதா? வேண்டாமா? முடிவு ட்ரம்பின் கையில்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
20 ஆனி 2025 வெள்ளி 11:18 | பார்வைகள் : 3659
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடர்பாக அமெரிக்காவிற்கும், தெஹ்ரானுக்கும் இடையேயும் பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானைத் தாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இறுதி உத்தரவை இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் செய்தி வெளியானது.
இந்த நிலையில், ஈரானை தாக்குவதா வேண்டாமா என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ஜனாதிபதி ட்ரம்பின் செய்தியை மேற்கோள் காட்டி கூறுகையில்,
"எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாமா வேண்டாமா என்பது குறித்து கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை நான் முடிவெடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan