ஈரானை முதுகில் குத்திய பாகிஸ்தான் - அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த செயல் ஆதாரத்துடன் அம்பலம்
19 ஆனி 2025 வியாழன் 19:12 | பார்வைகள் : 2313
ஈரானை உளவு பார்க்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் உதவியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மீது தனது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள், அதன் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில், ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரில், ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC), எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது.
"ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தான் இஸ்ரேல் மீது அணுகுண்டு வீசுவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளது," என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரி கூறினார்.
இந்த போரில் ஈரானுக்கு ஆதரவாக இருப்பதாக பாகிஸ்தான் கூறினாலும், அணுகுண்டு தொடர்பான ஈரானின் கருத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் மறுத்துள்ளார்.
இதனிடையே பாகிஸ்தானுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசியுள்ளார்.
இதனிடையே, ஈரானை உளவு பார்ப்பதில், பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது BACN போர்க்கள வான்வழி தகவல் தொடர்பு முனை ஆகும். இந்நிலையில் அமெரிக்காவின் BACN 11-9001 மூலம், ஈரானை உளவு பார்ப்பதற்கு பாகிஸ்தான் தங்கள் வான்வெளியை அனுமதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த BACN 11-9001, தரையில் உள்ள கூட்டணிப் படைகளுக்கும், காற்றில் உள்ள விமானங்களுக்கும் தகவல் தொடர்பு திறன்களை வழங்குகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அரசு ஒளிபரப்பாளரான IRIB இன் தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதற்கு முன்னதாக BACN 11-9001 பாகிஸ்தான் பரப்பில் இருந்ததை Flightradar24 ஸ்கிரீன்ஷாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
இதன் விளைவாக, ஈரானின் நிலைகள் தொடர்பான ஆயத்தொலைவுகளை(Coordinates) இஸ்ரேலுக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பதிவுகள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan