யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
19 ஆனி 2025 வியாழன் 14:29 | பார்வைகள் : 2659
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் வடலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா (வயது 80) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் , முதியவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
அதனை அடுத்து குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது, முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது, சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
முதியவர் உயிரிழந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan