Paristamil Navigation Paristamil advert login

F-35 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்….?

F-35 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்….?

19 ஆனி 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 2050


ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைது வரும் நிலையில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம், F-35 ஜெட் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

இஸ்ஃபஹானில் இஸ்ரேலிய ஹெர்ம்ஸ் ட்ரோனை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அரசு ஒளிபரப்பாளரான ஐஆர்ஐபி செய்தி வெளியிட்டுள்ளது.

கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகளை அது வெளியிட்டது.


இதற்கிடையில், வரமின் நகரின் ஜவாதாபாத் பகுதியில் ஈரானியப் படைகள் ஒரு விரோதமான F-35 போர் விமானத்தை அழித்ததாக அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலிடமிருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்