இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணை- ஈரான் அதிரடி

18 ஆனி 2025 புதன் 12:02 | பார்வைகள் : 2469
இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில், இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது.
நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. மேலும் நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025