Le Bourget விமானக் கண்காட்சியில் இரவோடு இரவாக மூடப்பட்ட இஸ்ரேலிய கண்காட்சித் தளங்கள்!!!
16 ஆனி 2025 திங்கள் 15:18 | பார்வைகள் : 5312
Le Bourget விமானக் கண்காட்சியில், இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களின் சில கண்காட்சித் தளங்கள் தாக்குதல் ஆயுதங்களை வெளியிட்டதாக கூறி மூடப்பட்டுள்ளன.
இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இசாக் ஹெர்சோக் (Isaac Herzog) இந்த முடிவை "அவமரியாதையானது" எனவும் இஸ்ரேலுக்கு எதிரான வேறுபாடு போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஏற்பாட்டாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன, அவர்கள் பணம் செலுத்தியும் உள்ளார்கள் எனவே இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என இன்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேலின் தளங்களில் இரவில் கறுப்புப் பலகைகள் வைக்கப்பட்டு மூடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகள், முன்கூட்டியே தாக்குதல் ஆயுதங்களை காண்பிக்க தடை விதித்தனர் என பதில் அளித்துள்ளனர். மேலும் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் விதிகளை மீறியுள்ளதாக கூறியுள்ளனர்.
இஸ்ரேலின் பங்கேற்புக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன; சில நீதிமன்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களைத் தடை செய்ய மறுத்துள்ளன.
Amnesty International அமைப்பு காசாவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விற்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய விண்வெளி கண்காட்சி, ஜூன் 16 முதல் 22 வரை Seine-Saint-Denis இல் உள்ள Le Bourget இல் Gifas (பிரெஞ்சு வானூர்தி மற்றும் விண்வெளி தொழில்கள் சங்கம்) ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan