ஆடவர் கிரிக்கெட்டில் புதிய விதிமாற்றங்கள் அறிவிப்பு
16 ஆனி 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 4628
ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமாற்றங்களை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC).
இந்த மாற்றங்கள் ஜூன் 17 முதல் டெஸ்ட் போட்டிகளில், ஜூலை 2 முதல் ஒருநாள் போட்டிகளில் மற்றும் ஜூலை 10 முதல் T20 போட்டிகளில் அமுலுக்கு வரும்.
1. புதிய பந்துக்கான விதிமாற்றம் (ODI):
இதுவரை ஒரு இன்னிங்ஸில் இரு பந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. புதிய விதிமாற்றத்தில், 34 ஓவர்களுக்கு இரண்டு பந்துகள், அதற்குப் பின் ஒரே பந்தை இருபுறத்திலுமாக பயன்படுத்த வேண்டும். போட்டி 25 ஓவர்கள் அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், தொடக்கம் முதலே ஒரு பந்தே பயன்படுத்தப்படும்.
இந்த மாற்றம், பந்து மற்றும் பேட் இடையேயான சமநிலையை உருவாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இறுதி ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் கிடைப்பதில்லை என்பது பலர பந்துவீச்சாளர்கள் குறையாக இருந்தது.
2. மாற்று வீரர் விதிமாற்றம் (concussion protocols)
போட்டிக்கு முன் ஒவ்வொரு அணியும் 5 மாற்று வீரர்களை ஒரு wicketkeeper, ஒரு batter, ஒரு seam bowler, ஒரு spin bowler, ஒரு all-rounder என்ற அடிப்படையில் பட்டியலிட வேண்டும்.
இந்த பட்டியலில் இல்லாத வீரரை மாற்றாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகாரத்துடன் இருக்கின்ற மேட்ச் ரெஃபரியின் அனுமதி பெறவேண்டும்.
3. 'bunny hop' பவுண்டரி கேட்ச் தடை:
எம்.சி.சி விதிகளின்படி, பவுண்டரிக்கு வெளியே கால் வைத்துப் பந்தை குதித்து பிடிக்கும் bunny hop கேட்ச் தடை செய்யப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan