Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான்

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான்

16 ஆனி 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 4820


ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் சேதமடைந்துள்ளது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் தேதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மூத்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

டோம் பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேலின் மீது விழுந்த குண்டுகள் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது. 

அமெரிக்காவின் ராணுவ தளத்தை தாக்கினால், ஈரான் மீது பெரியளவிலான தாக்குதல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், ஈரான் நடத்திய வான் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதமடைந்துள்ளது.

இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதலில் அமெரிக்கா தூதரகம் சேதமடைந்துள்ளதால், அமெரிக்கா போரில் ஈடுபட்டு பெரும் போராக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது.

ஏற்கனேவே, இஸ்ரேல் False flag மூலம், அமெரிக்காவின் நிலைகளை தாக்கி, அதன் மூலம் அமெரிக்காவை இந்த போரில் ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ராணுவ நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்