ஜனநாயகன்' படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே
16 ஆனி 2025 திங்கள் 11:54 | பார்வைகள் : 2595
நடிகர் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளும் முடிவடைந்துவிட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அறிவித்துள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், படக்குழுவினர் அவருக்கு மகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர். இந்த நிலையில், பூஜா ஹெக்டேயும் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் ‘ஜனநாயகன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்றும், அதன்பிறகு தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan