இடி மின்னல் மழை! - 6 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

15 ஆனி 2025 ஞாயிறு 18:44 | பார்வைகள் : 4069
இன்று ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்சின் கிழக்கு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் இடி மின்னல் தாக்குதல்களும், பலத்த மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டு, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Doubs, Territoire de Belfort மற்றும் Jura ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏனைய கிழக்கு, தென் கிழக்கு எல்லையோர மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025