அன்று ஆதரவற்று அமர்ந்திருந்ததை நினைத்துப் பார்ப்பேன்- உருக்கத்துடன் பேசிய மார்க்ரம்
15 ஆனி 2025 ஞாயிறு 16:45 | பார்வைகள் : 3526
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான எய்டன் மார்க்ரம், 2024 டி20 உலகக்கிண்ணத்தை மனதில் வைத்து விளையாடியதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன எய்டன் மார்க்ரம் (Aiden Markram), இரண்டாவது இன்னிங்ஸில் 136 ஓட்டங்கள் விளாசி வெற்றிக் முக்கிய காரணமாக அமைந்தார்.
இதன்மூலம் ஆட்டநாயகன் விருதை வென்ற அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கடந்த 2024 டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்று கிண்ணத்தைப் பறிகொடுத்தது.
இந்தப் போட்டியில் எய்டன் மார்க்ரம் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார்.
இந்நிலையில், மார்க்ரம் டி20 இறுதிப்போட்டியை குறிப்பிட்டு உருக்கத்துடன் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "2024 டி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டமிழந்த பின், ஆதரவற்று அமர்ந்திருந்ததை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். இம்முறை அதுபோல அமர நான் விரும்பவில்லை. அதை நினைத்து ஊக்கம் பெற்று விளையாடினேன்" என்றார்.
முன்னதாக அவர், ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் விளையாட விரும்பும் இடம் லார்ட்ஸ்.
இங்குள்ள அனைத்து உறுப்பினர்களும், ஏராளமான தென் ஆப்பிரிக்க ரசிகர்களும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan