Paristamil Navigation Paristamil advert login

தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா

தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா

9 வைகாசி 2025 வெள்ளி 10:34 | பார்வைகள் : 325


பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது'' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் உஷாராக இருந்த நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி, சதி திட்டத்தை முறியடித்துள்ளனர். அத்துமீறி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஜம்முவிற்கு, முதல்வர் உமர் அப்துல்லா விரைந்துள்ளார்.

''ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்துள்ளது. நான் நிலைமையை ஆராய ஜம்முவிற்கு விரைந்துள்ளேன்'' என்று உமர் அப்துல்லா சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்