இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தை....? டிரம்ப் நம்பிக்கை!

8 வைகாசி 2025 வியாழன் 18:11 | பார்வைகள் : 247
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் துல்லியமான தாக்குதல் நடத்தின.
சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்த தாக்குதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு போர்களை சந்தித்து வரும் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நிலை உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லை பதற்றம் தணிந்து, இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், இரு நாடுகளுடனும் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதை விரும்புவதாகவும் கூறினார்.
"இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன, எனவே, அவர்கள் இப்போது அமைதிக்கு திரும்ப வேண்டும் என நான் நம்புகிறேன். இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அமைதிக்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது," என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.