Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உடல் எடையை குறைக்க சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்.?

உடல் எடையை குறைக்க சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்.?

8 வைகாசி 2025 வியாழன் 16:52 | பார்வைகள் : 9127


சியா விதைகள் வழங்கும் நன்மைகளை முழுமையாக பெற விரும்பினால் அவற்றை நீங்கள் சாப்பிடுவதற்கு முன் சில மணி நேரங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யாவிட்டால் நீங்கள் சியா விதைகளின் சூப்பர்ஃபுட் திறனை சரியாக பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். சியா விதைகள் ஹைட்ரோஃபிலிக், அதாவது அவை தண்ணீரை மிகவும் உறிஞ்சும் தன்மை கொண்டவை. இவற்றை தண்ணீரில் ஊறவைக்கும் போது, ​​அவற்றின் எடையை விட 12 மடங்கு வரை திரவத்தை உறிஞ்சி, ஒவ்வொரு விதையையும் சுற்றி ஜெல் போன்ற பூச்சு உருவாகின்றது.

எனவே நீங்கள் சியா விதைகளை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் நம் வயிற்றில் விரிவடைந்து, நிறைவாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். இதனால் இயற்கையாகவே நாம் குறைவாகவே சாப்பிடுவோம். மேலும் இப்படி சாப்பிடப்படும் சியா விதைகள் செரிமானத்தை மெதுவாக்குகின்றன மற்றும் நமக்கு தேவைப்படும் ஆற்றலை நிலையாக வெளியிடுகின்றன.மேலும் தண்ணீரில் ஊற வைப்பதால் சியா விதைகளை சுற்றி உருவாகும் ஜெல், நம் குடல் நல்ல சத்துக்களை ஈர்க்க உதவுவதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.

பலரும் சியா விதைகளை சரியாக ஊறவைக்காமல் சாப்பிடுகிறார்கள். உலர்ந்த சியா விதைகளை சாப்பிட்ட அல்லது விழுங்கிய அதன் இயற்கை தன்மையால் உடலில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிடும். உலர் சியா விதைகளை சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிக்காவிட்டால் அவற்றின் செயல்திறன் குறைவது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயமும் உண்டு.

சியா விதைகளை அப்படியே சாப்பிடுவதில் உள்ள மோசமான விஷயம் என்னவென்றால், ஊட்டச்சத்துக்கள் விதை ஓட்டில் சிக்கிக் கொள்ளும், ஜீரணிக்கவே முடியாது. எனவே நீங்கள் எப்போது சியா விதைகளை எடுத்து கொண்டாலும் அதற்கு முன் அவற்றை குறைந்தது 20-30 நிமிடங்கள் தண்ணீர், பாதாம் பால் அல்லது நீங்கள் எடுத்து கொள்ள கூடிய வேறு திரவத்தில்  ஊற வைக்கவும். முடிந்தால் இரவு முழுவதும் அவற்றை ஊற வைப்பது நல்லது. சியா விதைகளை பொறுத்தவரை ஒரே நேரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வரை எடுத்து கொள்வது நல்லது. சியா விதைகள் கலோரி நிறைந்தவை எனவே இவற்றை அதிகமாகச் சாப்பிடுவது - குறிப்பாக மற்ற அதிக கலோரி நிறைந்த உணவுகளுடன் எடுத்து கொள்வது எடையை பாதிக்கும். நாளொன்றுக்கு 1–2 டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம்.

சுவையை அதிகரிக்க சிலர் சியா விதைகளை சர்க்கரை நிறைந்த உணவுகளுடன் சேர்க்கிறார்கள். தேன், மேப்பிள் சிரப் அல்லது இனிப்பு தயிர் நிறைந்த சியா புட்டிங் உண்மையில் ரத்த சர்க்கரை நிலைத்தன்மையை பாதிக்கிறது.

காலையில் முதலில் எலுமிச்சை நீரில் ஊறவைத்த சியா விதைகளை எடுத்து கொள்வது இயற்கையான நச்சு நீக்கியாக் செயல்படும். இந்த கலவை செரிமானத்தை ஆதரிக்கிறது, நச்சுகளை வெளியேற்றுகிறது மற்றும் காலை உணவு சாப்பிடும் வரை வலியுறு நிரம்பிய உணர்வை அளிக்கும். எலக்ட்ரோலைட் சமநிலைக்கு ஒரு சிட்டிகை பிங்க் சால்ட் சேர்க்கவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்