பாகிஸ்தான் லாகூரில் தொடர் குண்டுவெடிப்பு: பதட்டம்

8 வைகாசி 2025 வியாழன் 06:59 | பார்வைகள் : 292
பாகிஸ்தான் முக்கிய நகரான லாகூரில் இன்று (மே.8) காலையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.
3 இடங்களில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன, உயிர்ச்சேதம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகவில்லை. நேற்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.