Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

7 வைகாசி 2125 திங்கள் 14:56 | பார்வைகள் : 168


இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

அதேவேளை இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்