8 மே - மிகவும் பதற்றமான நிலையில் அல்ஜீரியா செல்லும் பிரெஞ்சுத் தூதுக் குழு!!

7 வைகாசி 2025 புதன் 13:43 | பார்வைகள் : 1423
தொடர்ச்சியாகப் பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் முறுகல் நிலை இருந்தாலும், 1945 ஆம் ஆண்டின் படுகொலையை நினைவு கூற நாளை வியாழக்கிழமை 8 மே, பிரான்சின் தூதுக்கழு அல்ஜீரியா செல்கின்றது.
இதில் வெளிவகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) மற்றும் 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ஜீரியா செல்கின்றனர்.
2024ஆம் ஆண்டு சகாரா பாலைவனத்தில் மொரோக்கோவின் இறையாண்மையை, பிரான்ஸ் அங்கீகரித்ததில் இருந்து அல்ஜீரியாவுடன் ஆரம்பித்த முறுகல் நிலை, 12 தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதுடன் உச்சத்தை அடைந்துள்ளது.
இருப்பினும் இந்த இரண்டாம் உலகப்போரில் பிரான்சிற்காக அல்ஜீரியாவில் நடந்த படுகொலைகளை நினைவுகூறுவதன் மூலம், நிலைமையைத் தணிவிற்குக் கொண்டுவர பிரான்ஸ் முயற்சிக்கின்றது.