இந்தியா - பாகிஸ்தான் மோதல் - டிரம்ப் காட்டம்

7 வைகாசி 2025 புதன் 10:31 | பார்வைகள் : 418
இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஒரு அவமானம் என்றும், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என நான் நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா “ஒபரேஷன் சிந்தூர்” ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த செய்தியை நாங்கள் அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என நான் கருதுகிறேன்.
இந்தியா - பாகிஸ்தான் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன் என அமெரிக்க ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.