Paristamil Navigation Paristamil advert login

வேலை நிறுத்தம்.. TGV பயணிகளுக்கு 50% சதவீத இழப்பீடு!

வேலை நிறுத்தம்.. TGV பயணிகளுக்கு 50% சதவீத இழப்பீடு!

7 வைகாசி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 833


தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 50% சதவீத இழப்பீடு வழங்கப்படும் என (de 50% du prix du billet) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CGT-Cheminots மற்றும் SUD-Rail ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 9, 10, 11 ஆகிய நாட்களில் இடம்பெற உள்ள இந்த வேலை நிறுத்தம் காரணமாக TGV Intercités தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன. 

அதை அடுத்து, பாதிக்கப்படும் பயணிகளுக்கு 50% சதவீத இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு பயணக்கட்டணத்துடன் இணைந்தது இல்லை எனவும், பயணக்கட்டணம் 100% சதவீதம் வழங்கப்படுவதுடன், மேஎலதிகமாக 50% சதவீத கட்டணம் காசோலையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 29 ஆம் திகதிக்குள் இதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வேலை நிறுத்தத்தினால் பத்தில் ஒரு சேவை பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்