உதைபந்தாட்ட போட்டி : 2,000 காவல்துறையினர் குவிப்பு!!

6 வைகாசி 2025 செவ்வாய் 22:05 | பார்வைகள் : 429
நாளை மே 7, புதன்கிழமை இடம்பெற உள்ள PSG-Arsenal அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளின் போது பாதுகாப்பிற்காக 2,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Parc des Princes மைதானத்தில் இடம்பெறும் இந்த அரையிறுதிப்போட்டி மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் இடம்பெறுவதால், ரசிகர்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும், அதை தடுப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதானத்தைச் சூழ உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ரசிகள் பல தடவைகள் சோதனையிடப்பட்டே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளையும் இரவு 9.30 மணியுடன் மூடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.