Paristamil Navigation Paristamil advert login

Metroஇல் ஒரு செடிக்கு €150 அபராதம்: பணத்தை மீளத்தருவதாக RATP அறிவிப்பு!

Metroஇல் ஒரு செடிக்கு €150 அபராதம்: பணத்தை மீளத்தருவதாக RATP அறிவிப்பு!

6 வைகாசி 2025 செவ்வாய் 17:45 | பார்வைகள் : 913


கடந்த ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகரில் உள்ள "République" மெட்ரோ நிலையத்தில், 1.30 மீட்டர் உயரமுள்ள "Oiseau de paradis" என அழைக்கப்படும் உயரமான அலங்கார செடியை எடுத்துச்சென்றதற்காக 24 வயது Salomé என்பவருக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது RATP நிறுவனம் அந்த அபராதத் தொகையை திருப்பி வழங்கும் என அறிவித்துள்ளது.

மே 4ஆம் தேதி, சாலோமே தனது வீட்டுக்குத் திரும்ப Republic மெட்ரோ நிலையத்தில் இருந்து Metro 3-ஐ எடுக்க கையில் செடியுடன் முயன்றபோது, இது "ஆபத்தான அல்லது தொந்தரவு விளைவிக்கும் பொருள்" எனக் கருதி, பரிசோதர் அபராதம் விதித்துள்ளார். இடைவெளியே இல்லாமல் சாலோமே அபராதத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சாலோமே வாடிக்கையாளர் சேவைக்கு புகார் செய்ததோடு, குறித்த விடயம் சமூக ஊடகங்களில் வைரலானது. 

"அபராதம் விதிக்கப்பட்டது உண்மைதான்" எனவும் அவரது கோரிக்கை நேற்று மதிப்பீடு செய்யப்பட்டது எனவும் RATP நிறுவனம் இன்று கூறியுள்ளது. மேலும் குற்றம் நேர்ந்த இடம் மிகுந்த கூட்டமில்லாத நேரத்திலும், Metro வழித்தடத்திலும் இருந்தது என்பதால், RATP நிறுவனம் அந்த அபராதத் தொகையை திருப்பி வழங்கும் என அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்