சூர்யா – தனுஷ் காம்போவில் புதிய படம்….

6 வைகாசி 2025 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 3967
கடந்த 2023 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வாத்தி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கி இருந்தார்.சூர்யா - தனுஷ் காம்போவில் புதிய படம்.... 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் பேட்டி!கல்வி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
இதைத்தொடர்ந்து வெங்கி அட்லுரி, துல்கர் சல்மான் நடிப்பில் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அடுத்தது இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை சூர்யாவும் உறுதி செய்து இருக்கிறார். அதன்படி இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெங்கி அட்லுரியிடம் சமீபத்தில் நடந்த பேட்டியில் உங்களுடைய அடுத்த படம் என்ன? என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய அடுத்த படம் தமிழ் படம் தான்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் சூர்யா – தனுஷ் காம்போவில் உருவாகப் போகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெங்கி அட்லுரி, “இது என்னுடைய கனவு காம்போ. ஆனால் இப்போதைக்கு இல்லை. என்னுடைய அடுத்த படம் தொடர்பான அடுத்த அப்டேட்டுக்காக ஒரு வாரம் காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூர்யா 46 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
\
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025