Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு

6 வைகாசி 2025 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 158


டார்பூரில் இனப்படுகொலையைத் தூண்டிவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் மீது குற்றம் சாட்டி சூடான் தொடர்ந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் (ICJ) தள்ளுபடி செய்தது.

சூடான் துணை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் இனப்படுகொலையைத் தூண்டிவிட்டதாக சூடான் வழக்குத் தொடர்ந்ததில் அதிகார வரம்பு இல்லை என குறிப்பிட்டு தள்ளுபடி செய்துள்ளது.

டார்பூரில் துணை ராணுவப் படைகளை ஆதரிப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாக சூடான் கடந்த மாதம் ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது, ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவசர நடவடிக்கைகளுக்கான சூடானின் கோரிக்கையை நிராகரித்தது மற்றும் வழக்கை அதன் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டது.

மேலும், அதிகார வரம்பு இல்லாததால், சூடான் கூறும் கூற்றுக்களின் தகுதிகள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதில் இருந்து நீதிமன்றம் அதன் சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதிகார வரம்பு இல்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகம் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடவில்லை என்றும், தங்கள் மக்களையும் அரசையும் பாதுகாக்க அனைத்து சட்ட வழிகளையும் பின்பற்றுவதாகவும் சூடான் செவ்வாயன்று உறுதியளித்துள்ளது.

இதனிடையே, ஐக்கிய அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சூடானில் நடக்கும் மோதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. மாறாக, போரிடும் தரப்பினரால் செய்யப்பட்ட அட்டூழியங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வருடங்களாக நீடிக்கும் உள்நாட்டுப் போரில் சூடான் இராணுவத்தை எதிர்த்துப் போராடி வரும் துணை ராணுவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆயுதம் வழங்குவதாக சூடான் குற்றம் சாட்டுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்தாலும், ஆயுதங்கள் வழங்கல் தொடர்பான மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளில் உள்ள ஆதாரங்களை மேற்கோள் காட்டி சில ஐ.நா. நிபுணர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது நம்பகமானது என்று கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்