வாராவாரம் சம்பளம்.. - பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!

5 வைகாசி 2025 திங்கள் 21:09 | பார்வைகள் : 1143
மாதாந்த சம்பளத்துக்கு பதிலாக வாராவாரம் சம்பளம் வழங்கும் முன்மொழிவு ஒன்றுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பகுதி பகுதியாக சம்பளம் வழங்கப்படுதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை நீங்கள் விரும்புகின்றீர்களா என கருத்துக்கணிப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, 63% சதவீதமான மக்கள் ஆம் என தெரிவித்துள்ளனர். வாராவாரமாகவோ, அல்லது மாதத்தில் இரண்டு தடவைகளோ பிரித்து ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் மாத சம்பளத்துக்கு பணிபுரியும் ஊழியர்களில் 75% சதவீதமானவர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள ஊதியம் தொடர்பான சட்டம் 1978 ஆம் ஆண்டின் பின்னர் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.