Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை கவர - 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு!

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை கவர - 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு!

5 வைகாசி 2025 திங்கள் 15:00 | பார்வைகள் : 400


வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை கவரும் நோக்கில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 100 மில்லியன் யூரோக்களை ஆராய்ச்சிக்காக ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
 

இன்று மே 5 ஆம் திகதி இதனை Sorbonne பல்கலைக்கழத்தில் வைத்து மக்ரோன் அறிவித்தார். அங்கு ”அறிவியலுக்காக பிரான்சை தேர்ந்தெடுங்கள்” (Choose Europe for Science) எனும் தொனிப்பொருளில் மாநாடு ஒன்று இடம்பெற்றது. இதில் பங்கேற்ற மக்ரோன், அங்கு வைத்தே இதனை அறிவித்தார்.

 

பிரதானமாக அமெரிக்கர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த தொகையினை மக்ரோன் அறிவித்தார். நீண்டகாலமாக ஜனாதிபதி  வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்