குடியுரிமைக்கு பிரெஞ்சு மொழியும் பிரான்சின் தகமைகளும்!!மேலும் பல விடயங்கள்!!

5 வைகாசி 2025 திங்கள் 14:28 | பார்வைகள் : 1122
இன்று வெளியாட்டவர்கள் தொடர்பாகவும் அவர்களின் குடியுரிமை தொடர்பாகவும் பல புதிய சடடங்களையும் நடைமுறைகளையும் அனைத்து மாவட்டக் காவற்துறைத் தலைமையகத்திற்கும் மாவட்ட ஆணையங்களிற்கும் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ அறிவித்துள்ளார்.
«முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இருப்பவர்கள் கூட குடியுரிமை பெறுவதானாலும், முக்கியமாக பிரெஞ்சு மொழியில் தேர்ச்சியும், பிரான்சின் தகமைகள் தொடர்பான அறிவும் கட்டாயம் இருத்தல் வேண்டும்»
«அவர்களிற்கு சமூகக் கொடுப்பனவுகளை விட முறையான நிலையான வருமானங்கள் இருந்திருத்தல் வேண்டும்»
மேற்கண்டவர்களிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த ஐந்து பக்க அறிக்கையில் வெளிநாட்வர்களிற்கான உரிமைகளும் கடமைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குடியேற்றம் தொடர்பான கடுமையான சட்டங்களும் அறிவுறுத்தல்களும் இடம்பெற்றுள்ளன.
«இந்த குடியுரிமைச் சட்டமானது ஒரு உரிமையாக மட்டுமல்லாது பிரெஞ்சு அரசாங்கத்தின் இறையாண்மையின் முடிவாகவே எடுத்துக் கொள்ளல் வேண்டும் »
எனவும் இந்த அறிக்கையில் புரூனோ ரத்தையோ தெரிவித்துள்ளார்.