Paristamil Navigation Paristamil advert login

உந்துருளி ஒற்றைச்சில் ஓட்டம் - மாநகரசபை உறுப்பினர் தாக்குதல்!

உந்துருளி ஒற்றைச்சில் ஓட்டம் - மாநகரசபை உறுப்பினர் தாக்குதல்!

5 வைகாசி 2025 திங்கள் 10:26 | பார்வைகள் : 477


போர்தோவினை தலைநகரமாகக் கொண்ட GIRONDE மாநிலத்தின் நகரமான Gauriaguet இன் நகரசபை உறுப்பினர் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் ஒற்றைச்சில்லை தூக்கின் கொண்டு ஓடும் ரோடியோ (rodéo) வினைத் தடுப்பதற்காக, மக்களிற்குத் தொந்தரவு கொடுக்கும் இவர்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததுடன், இதனை நிறுத்த மாவட்ட சட்டப்பிரதிநிதிக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த சனிககிழiமை இவர் வெளியே போகும்போது, அவர் மீது கடுங்கேபாம் கொண்ட இந்த ரோடியோ உந்துருளிச்சாரதிகள் 15 இற்கும் மேற்பட்டோர் உந்துருளியில் அவரைச்சுற்றி வளைத்து, இரும்புக்கம்பிகளால் மிகவும் மோசமாகத் தாக்கிப் படுகாயம் ஏற்படுத்தி உள்ளனர்.

இவர் உடனடியாக அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளிளைத் தேடித் தண்டிக்கும் பொறுப்பு Saint-André-de-Cubzac  இன் பிராந்திய தன்னியக்கப் படையினரிடமும் ( brigade territoriale autonome) விசாரணைப்பரிவினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிராந்திய தன்னியக்கப் படை 2024 ஆம் ஆண்டு முதல், மாநரசபை உறுப்பினர்களை வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்