Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இரத்து

இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இரத்து

5 வைகாசி 2025 திங்கள் 10:54 | பார்வைகள் : 160


இஸ்ரேலுக்கான விமான சேவையை இரத்துச் செய்வதாக எயார் இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் சுமார் 2 வருடங்களை நெருங்கியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் இராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த எயார் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.

டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி இயக்கப்பட இருந்த விமானத்தையும் இரத்துச் செய்வதாக எயார் இந்தியா அறிவித்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்