குடியுரிமை கோரிக்கையாளர்களுக்கு இறுக்கமான சட்டம்.. உள்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்!!
5 வைகாசி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 5513
பிரான்சில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் தொடர்பில் மிகவும் இறுக்கமான நடைமுறையை கொண்டுவரும் நோக்கில் உள்துறை அமைச்சர் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இன்று மே 5, திங்கட்கிழமை காலை உள்துறை அமைச்சர் Bruno Retailleau, Val-de-Marne மாவட்ட காவல்துறையினரை Créteil நகரில் வைத்து சந்திக்க உள்ளார். அதன்போது அமைச்சர் இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குடியேற்ற கோரிக்கை வைப்பவர்கள் முன்மாதிரியான செயற்பாடுகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டிருத்தல் வேண்டும் எனவும், அவ்வாறவர்களது ஆவணங்கள் முழுமைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், அதன் பின்னரே குடியுரிமை வழங்குவது தொடர்பில் அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த நிபந்தனைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை அமைச்சர் இன்று வெளியிட உள்ளார்.
குடியேற்ற கோரிக்கை முன்வைப்பவர்களது ‘தொழில்முறை திறன்’ சோதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரான்சில் சென்ற 2024 ஆம் ஆண்டில் 66,745 குடியுரிமைக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.3% சதவீதம் அதிகமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan