Paristamil Navigation Paristamil advert login

Sartrouville : வாகனத்தரிப்பிடத்துக்காக வாக்குவாதம்.. காவல்துறை வீரருக்கு கத்திக்குத்து!!

Sartrouville : வாகனத்தரிப்பிடத்துக்காக வாக்குவாதம்.. காவல்துறை வீரருக்கு கத்திக்குத்து!!

4 வைகாசி 2025 ஞாயிறு 20:47 | பார்வைகள் : 728


வாகனத்தரிப்பிடம் ஒன்றுக்காக இடம்பெற்ற வாக்குவாதம் கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது. காவல்துறை வீரர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று மே 3, சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் இச்சம்பவம் Sartrouville (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. Avenue Jean-Jaurès வீதியில் காவல்துறை வீரர் ஒருவர் அவரது மகிழுந்தை நிறுத்த முற்பட்டபோது, மற்றும் மகிழுந்தில் அங்கு வந்த நால்வர் கொண்ட குழு ஒன்றுடன் முரன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதை அடுத்து அக்குழு, காவல்துறை வீரர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கத்தி ஒன்றினால் அவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தின் போது குறித்த வீரர் கடமையில் இல்லை எனவும், சிவில் உடையில் இருந்துள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை அடுத்து, 911 எனும் அவரச இலக்கத்துக்கு அழைத்த வீரர், காவல்துறையினர் பயன்படுத்தும் சில ரகசிய சொற்கள் மூலம் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

சில நொடிகளில் இரண்டு மகிழுந்துகளில் காவல்துறையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு, குறித்த நால்வரையும் கைது செய்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்