ரஷ்யாவுக்குப் பயணமாகும் சீன ஜனாதிபதி

4 வைகாசி 2025 ஞாயிறு 21:07 | பார்வைகள் : 234
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஸி ஜின்பிங் ஈடுபடவுள்ளார்.
மேலும், மாஸ்கோவில் நடைபெறவுள்ள வெற்றிநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
புடின் உடனான பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, கூட்டாண்மை விரிவாக்கம், இராஜிய ரீதியிலான யுக்தி, சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.