உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!

5 வைகாசி 2025 திங்கள் 08:33 | பார்வைகள் : 103
டி.ஆர்.டி.ஓ., சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவியை, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது.
இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது: 17 கிமீ உயரத்திற்கு அதிநவீன கருவியை வானில் பறக்கவிட்டு, முதல் விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. உளவுத்துறை, கண்காணிப்பை மேம்படுத்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உளவு தகவல் சேகரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது ஒரு மைல்கல் என டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சோதனை நடந்துள்ளது.
சோதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ.,வை பாராட்டினார்.