கிரீக்கில் வெடிகுண்டு எடுத்த சென்ற பெண் உயிரிழப்பு

4 வைகாசி 2025 ஞாயிறு 15:15 | பார்வைகள் : 199
கிரீக்கின் தெசலோனிகியில் நடந்த ஏடிஎம் வெடிகுண்டு முயற்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரேக்கத்தின் வடக்கு நகரமான தெசலோனிகியில்(Thessaloniki) சனிக்கிழமை அதிகாலை 38 வயது பெண் ஒருவர் தான் எடுத்துச் சென்ற வெடிபொருள் வெடித்ததில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் சனிக்கிழமை அன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் உள்ளூர் வங்கி ஒன்றின் அருகே நிகழ்ந்துள்ளது.
சக்தி வாய்ந்த இந்த வெடிப்பின் காரணமாக, வங்கியின் சுற்றுப்புறத்தில் இருந்த பல கடைகள் சேதமடைந்துள்ளன,
மேலும் சில வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், "முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் வெடிகுண்டு வைக்க முயன்றது தெரிய வந்துள்ளது.
அவர் ஒரு வெடிக்கும் சாதனத்தை எடுத்துச் சென்று அதை ஏடிஎம்-ல் பொருத்த திட்டமிட்டதாக தெரிகிறது.
எதிர்பாராத விதமாக, ஏதோ தவறு நடந்து அந்த வெடிபொருள் அவர் கையிலேயே வெடித்துவிட்டது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த அந்தப் பெண் இதற்கு முன்பும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக காவல்துறையினருக்கு பட்டியலில் உள்ளவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது, அந்தப் பெண்ணுக்கும் தீவிர இடதுசாரி அமைப்புகள் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.