சமூகக்கொடுப்பனவுகளில் €450 மில்லியன் யூரோக்கள் மோசடி...!!

4 வைகாசி 2025 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 501
கடந்த 2024 ஆம் ஆண்டில் சமூகநலக்கொடுப்பனவுகளில் Caisse nationale des allocations familiales (Cnaf) €450 மில்லியன் யூரோக்கள் வரை மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில் 30 மில்லியன் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. காவல்துறையினர், பரிசோதகர்கள், முன்னாள் வங்கி அதிகாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் இணைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது €450 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆண்டுகளில் பதிவான தொகையோடு ஒப்பிடுகையில் 20% சதவீதம் அதிகமாகும்.