மணற்புயல் : மகிழுந்துகள் வைத்திருப்போர் அவதானம்! - குற்றப்பணம்!!

4 வைகாசி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 617
சஹாரா மணற்புயல் பிரான்சை பீடித்துள்ளது. குறிப்பாக தெற்கு பிரான்சில் அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை அடுத்து மகிழுந்து வைத்திருப்போர் இந்த மணற்புயல் தொடர்பில் அவதானமாக இல்லாத போது குற்றப்பணம் செலுத்த நேரும் என தெரிவிக்கப்படுகிறது.
மகிழுந்துகளில் மணற்துகள்கள் பதிந்திருந்தால், அவற்றை சுத்தப்படுத்தக்கூடிய வசதிகள் மகிழுந்தில் இருக்கவேண்டும்.
அதன்படி, மகிழுந்து முன் கண்ணாடியை கழுவுவதற்கு தண்ணீர் பாய்ச்சியடிக்கும் கருவி செயற்படும் நிலையில் இருக்கவேண்டும். அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். தண்ணீர் வழிப்பான் செயற்படும் நிலையில் இருக்கவேண்டும். தரிப்பிடத்தில் மகிழுந்துகள் நிறுத்தப்படும் போது அதன் கண்ணாடிகள் ஒட்ட பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
மேற்படி விடயங்களை கவனிக்காத போது உங்களுக்கு மூன்றாம் பிரிவில் €68 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நேரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.