அமெரிக்காவில் கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

4 வைகாசி 2025 ஞாயிறு 05:59 | பார்வைகள் : 161
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் (Yellowstone)தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில்
லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்
இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் எட்டு பேர் காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.