
4 வைகாசி 2025 ஞாயிறு 22:59 | பார்வைகள் : 132
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அங்கோலா அளித்த ஆதரவிற்கு நன்றி. இந்தியாவிற்கும் அங்கோலாவிற்கும் இடையிலான உறவு நீண்ட காலமானது. இந்தியாவும், அங்கோலாவும் தங்கள் ராஜதந்திர கூட்டாண்மையின் 40வது ஆண்டு நிறைவு செய்துள்ளது. எங்கள் உறவு மிகவும் பழமையானது. அங்கோலா தனது சுதந்திரத்திற்காகப் போராடியபோது, இந்தியா அவர்களுக்கு ஆதரவாக நின்றது.
கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு அதிகரித்துள்ளது. வர்த்தகம் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களை ( ஒரு பில்லியன் என்பது 100 கோடி) எட்டியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில் 17 புதிய தூதரகங்களைத் திறந்துள்ளோம்.
மானியங்கள்ஆப்பிரிக்காவிற்கு 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் வசதிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு 700 மில்லியன் டாலர் மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் 8 நாடுகளில் தொழில் பயிற்சி மையங்களைத் திறந்துள்ளோம். ஐந்து நாடுகளில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் உதவுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.