Paristamil Navigation Paristamil advert login

பாடசாலை நேர அமைப்புகள் மற்றும் விடுமுறைகள் மீது கவனம் செலுத்தும் ஜனாதிபதி!

பாடசாலை நேர அமைப்புகள் மற்றும் விடுமுறைகள் மீது கவனம் செலுத்தும் ஜனாதிபதி!

3 வைகாசி 2025 சனி 14:38 | பார்வைகள் : 6955


ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கல்வியை மையமாகக் கொண்ட குடிமக்கள் மாநாட்டை ஜூனில் தொடங்கவுள்ளார். இதில் பாடசாலை  நேர அமைப்புகள், விடுமுறைகள் மற்றும் மாணவர்களின் தினசரி பாடநேர அட்டவணைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெறும். 

இந்த மாநாடு குறைந்தது குளிர்காலம் வரை நீடிக்கும் என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சில் (CESE) இதை ஒழுங்குபடுத்த உள்ளது.

இம்மானுவேல் மக்ரோன், பாடசாலை நாட்களின் ஒழுங்கமைப்பு மாணவர்களின் வளர்ச்சிக்கும், பெற்றோரின் சமநிலையான வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். இது அவரின் மூன்றாவது குடிமக்கள் மாநாடாகும். 

இந்த மாநாடுகளின் பங்களிப்பானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்