அயன் பெட்டிகளை கைவிட்ட பிரெஞ்சு மக்கள்.. ஒரு விசேட ஆய்வு!!
3 வைகாசி 2025 சனி 13:36 | பார்வைகள் : 13156
உடுப்புகளை நேர்த்தியாக்க பயன்படுத்தப்படும் அயன் பெட்டிகள் (repasse) வாங்குவதை பிரெஞ்டு மக்கள் கைவிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு மக்கள் வீடுகளில் அயன் பெட்டிகளை பயன்படுத்துவது மிக அரிதான ஒன்றாக மாறி வருகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஒரு அயன் பெட்டி இருந்துள்ளது எனவும், தற்போது அயன் பெட்டிகள் விற்பனை மற்றும் அதன் பயன்பாடுகள் பாதிக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் பிரான்சில் 3 மில்லியன் அயன் பெட்டிகள் விற்பனையாகியுள்ளன.
சென்ற 2024 ஆம் ஆண்டில் அதன் விற்பனை 1.6 மில்லியன்களாக இருந்துள்ளன.
பிரெஞ்சு மக்களின் பழக்கவழக்கங்கள் மாற்றமடைந்துள்ளதாகவும், கொவிட் 19 காலத்தின் பின்னர் அலுவலகங்களில் டி.சேர்ட் போன்ற ஆடைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் அயன் செய்ய தேவைப்படாத ஆடைகளை ஆண்கள், பெண்கள் இருவரும் தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ஆய்வினை NielsenIQ-GFK எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan