அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா…

3 வைகாசி 2025 சனி 13:19 | பார்வைகள் : 636
ஜவான் என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்த அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் படத்துக்கான லுக் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் ராஜமௌலி மகேஷ் பாபு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால் தேதிகள் இடிப்பதால் தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.