Paristamil Navigation Paristamil advert login

சிலி மற்றும் அர்ஜென்டினாவில் வெளியேற்றப்பட்ட மக்கள் - சுனாமி எச்சரிக்கை

 சிலி மற்றும் அர்ஜென்டினாவில் வெளியேற்றப்பட்ட மக்கள் - சுனாமி எச்சரிக்கை

3 வைகாசி 2025 சனி 11:09 | பார்வைகள் : 255


சிலியின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிலி அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவிற்கும் இடையேயான டிரேக் பாதையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மையப்பகுதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரத்திலிருந்து 219 கிமீ (136 மைல்) தொலைவில் இருந்தது .

இது உலகின் தெற்கே உள்ள நகரமாகும்.

சிலியின் தொலைதூர மாகல்லன்ஸ் பகுதி மற்றும் சிலி அண்டார்டிக் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதோடு அர்ஜென்டினாவின் டியர்ரோ டெல் ஃபியூகோ பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்