அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய பிரபலம்..!

3 வைகாசி 2025 சனி 12:46 | பார்வைகள் : 224
இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளத்தில் காதல் கடிதம் எழுதியதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் "கிங்டம்" திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத்த் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது, மேலும் அது நல்ல வரவேற்பை பெற்றது. பாடல் வெளியிடப்பட்ட பிறகு, விஜய் தேவரகொண்டா அனிருத்துக்கு ஒரு காதல் கடிதம் எழுதி, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா கூறியதாவது: "நாங்கள் ஒரு காதல் பாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தோம், நான் அனிருத் மீது மதிப்பும், காதலும் கொண்டு உள்ளேன்.
'3' படம் வெளியான காலத்திலிருந்தே, நான் அனிருத்தின் ரசிகனாக இருந்து அவருடைய இசையில் மெய் மூழ்கி ஆச்சரியப்பட்டேன். ஒருநாள் நான் நடிகராக மாறினால், எனது படத்திற்கு அவர் தான் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு அது இப்போது நிறைவேறியுள்ளது."
என் 13வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்த முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். நாங்கள் எங்கள் உலகத்தையும் உணர்வுகளையும் உங்களுக்கு திறந்து விடுகிறோம். இது உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நினைவுகளையும் சேர்க்கும் என்று நம்புகிறேன்." என விஜய் தேவரகொண்டா பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.