Paristamil Navigation Paristamil advert login

பாக்., ராணுவம்! உயிருக்கு பயந்து 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு

பாக்., ராணுவம்! உயிருக்கு பயந்து 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு

3 வைகாசி 2025 சனி 07:10 | பார்வைகள் : 250


எல்லா நாடுகளிலும் ராணுவம் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்காக, ராணுவ கட்டமைப்பு இருக்கிறது. அது அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும். ஜனாதிபதி, பிரதமர், ராணுவ அமைச்சர் என்ற அதிகார மையங்களின் கீழ், ராணுவத்தை, அரசு வழி நடத்தும். ஆனால், 'உலகின் ரவுடி நாடு' என அழைக்கப்படும், பாகிஸ்தானில் எல்லாமே தலைகீழ்.

பாகிஸ்தானில் அரசை வழி நடத்துவது ராணுவம். அதிபர் என்பவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பிரதமரும், ராணுவ அமைச்சரும் ராணுவம் கூறுவதை ஏற்று நடக்கும், தலையாட்டி பொம்மைகள்.

ஜனநாயக அரசு ஆட்சியில் இருப்பதும், அகற்றப்படுவதும் ராணுவத்தின் கையில் இருக்கிறது. தேர்தல் நடந்தாலும், பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், ராணுவம் அனுமதிக்க வேண்டும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, ராணுவத்தின் வேலை நாட்டுக்கு பாதுகாப்பு தருவது அல்ல; நாட்டில் அமைதி ஏற்படுத்துவதும் அல்ல. நாடு அமைதியாக இருந்தால், அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடாமல் இருந்தால், அந்நாட்டு ராணுவத்துக்கு வேலை எதுவும் இல்லையே. அதனால் தான், ஆட்சி நிர்வாகத்தில் ராணுவம் மூக்கை நுழைக்கிறது. அவ்வாறு, பல ராணுவ சர்வாதிகாரிகள் பாகிஸ்தானில் உருவாகி வருகின்றனர்.

அயூப் கான், யாஹ்யா கான், ஜியா - வுல்- ஹக், பர்வேஸ் முஷாரப் என, பல ராணுவ ஆட்சியாளர்களை பாகிஸ்தான் கண்டுள்ளது. பிரதமர் சுல்பிகர் அலி ஆட்சியை கவிழ்த்து, ராணுவ சர்வாதிகாரி ஆனவர் ஜியா-வுல் - ஹக்.

அவர் பதவியேற்கும்போது, அவரது முக்கிய திட்டமே இந்தியாவுடன் போர் செய்வது தான். 'இந்தியாவை, பாகிஸ்தான் ஆயிரம் துண்டுகளாக வெட்டி, ரத்த ஆறு ஓட விடுவோம்' என கொக்கரித்துக் கொண்டே ஆட்சிக்கு வந்தார் ஜியா. ஆனால், அவரால் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப்பின், விமான விபத்தில் பலியானார்.

ராணுவ சர்வாதிகாரி முஷாரப்பும் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே, 1999ல் இந்தியாவுடன் கார்கில் போரில் ஈடுபட்டு, தோற்றுப்போனார். தற்போதைய ராணுவ தளபதி அசிம் முனீரும், மக்களிடம் செல்வாக்கு பெற, போருக்கு துாபம் போட்டுள்ளார்.

வீரர்கள் விரக்தி

ஆனால், மக்கள் மட்டுமல்ல, ராணுவத்துக்குள்ளே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக, ராணுவத்துக்குள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் (அதிகாரிகள் உட்பட) பதவியில் இருந்து விலகுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர்.

மாவீரன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் என உலகம் கண்ட வீரர்கள் பலரும் போர் வெறியர்களாக இருந்தனர். ஆனால், ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட வெறுப்பு, தொய்வு தான், கடைசியில் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.

பாக்., ராணுவத்தில் ஏற்பட்டுள்ள, சலசலப்பை முதலில் அடக்கிவிட்டு, அசிம் முனீர், யுத்தத்துக்கு புறப்பட்டால், சரியாக இருக்கும். அல்லது, ஜியா - உல் - ஹக் கூறியதை, நிஜத்தில் செய்து காட்டுவது இந்தியாவாக தான் இருக்கும்.

'நண்பர்கள்' இடையே போர்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் யாஹ்யா கான். அப்போது, அவரது நண்பர், இந்தியாவின் பீல்டு மார்ஷல் மறைந்த மானேக் ஷா. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று, 19 ஆண்டுகளுக்கு பின், 1966ல் பாக்., ராணுவ தளபதியாக யாஹ்யா கான் பொறுப்பேற்றார். பின், ராணுவ சர்வாதிகாரியாகி ஆட்சியை பிடித்து, 1969ல் அதிபரானார்.

1971ல் இந்தியாவுடன் மூன்றாவது போர் நடந்தது. அந்த போரை இந்தியாவில், பிரதமர் இந்திரா உத்தரவின்படி, வழி நடத்தியவர் அப்போதைய ராணுவ தளபதி மானேக் ஷா. யாஹ்யா கானின், பாகிஸ்தான் படை முன்னாள் நண்பர் மானேக் ஷாவிடம் வீழ்ந்தது. இந்தியா வென்றது; வங்கதேசம் உருவானது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்