Paristamil Navigation Paristamil advert login

சிறையிலிருந்து தவறுதலாக குற்றவாளி விடுதலை - காவற்துறையினர் தேடுதல் வேட்டை!!

சிறையிலிருந்து தவறுதலாக குற்றவாளி விடுதலை - காவற்துறையினர் தேடுதல் வேட்டை!!

3 வைகாசி 2025 சனி 01:17 | பார்வைகள் : 2240


போர்தோவின் (Bordeaux - Gironde)  சிறையில் சிறையதிகாரிகள் மாபெரும் தவறொன்றை செய்துள்ளனர்.

விடுதலை செய்ய வேண்டிய தண்டனை முடிந்த கைதிக்குப் பதிலாக, கிட்டத்தட்ட ஒரே பெயர் உள்ள, அதே பகுதியில் உள்ள 10 வருடத் ண்டனைக்காலம் உள்ள கைதியை விடுவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட கைதி, வன்முறையுடன் கொள்ளையடித்துக் கொலையும் செய்த குற்றவாளி ஆவான். 2019 ஆம் ஆண்டு செய்த கொலைக் குற்றத்திற்காக, கடந்த ஆண்டு இவனிற்கு 10 ஆண்டு கடுங்காவற் தண்டனை  வழங்கப்பட்டது.

காவற்துறை மற்றும் சிறையதிகாரிகளின் தவறால் ஒரு பெருங்குற்றவாளி வெளியே விடப்பட்டுள்ளான். இன்னமும் பல குற்றச் செயல்களில் அவன் ஈடுபடக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது,

பெருமளவான காவற்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தக் குற்றவாளி இத்தனைக்கும் எத்தனை நாட்டு எல்லைகள் தாண்டியுள்ளானோ தெரியாது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்